அபிஷேக்பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். அப்பாவாகும் சந்தோஷத்தில் உள்ள அபிஷேக் பச்சன் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்புகளை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். பிரசவத்தின் போதும், அதற்கடுத்த தினங்களிலும் ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையுடன் இருக்க திட்டமிட்டுள்ளார் அபிஷேக் பச்சன். இதற்கிடையே, ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என டாக்டர்கள் தேதி குறித்துள்ளனர் .நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அவருக்கு டெலிவரி நடக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
ஆனாலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7 ஸ்டார் மருத்துவமனையில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
11ன் விசேஷம்
* எண்ணியல் ஜோதிடத்தில் 11 என்பது மிகப்பெரிய எண்ணாக கருதப்படுகிறது. ஒரே எண்ணே இரு இலக்கங்களாக உள்ளது இதன் தனித்துவம். ஒன்று என்பதே, புதிய தொடக்கமாகவும், சுத்தத்தையும் குறிப்பிடுகிறது. அதுவே இரு இலக்கமாக வரும்போது அதன் பலம் இன்னும் அதிகரிக்கிறது.
* 11 என்பது உயர் எண்ணங்கள், கண்டுபிடிப்புகள், சுத்திகரிப்பு, ஒத்திசைவு, சமநிலை, முழுமை, நோக்கம் ஆகியவற்றை குறிக்கிறது.
* மேலும், இந்த எண் ஆண், பெண் சரிசமம் என்பதை உணர்த்துகிறது. இதில் சூரியன் மற்றும் சந்திரன் சக்தி நிறைந்துள்ளது. வாழ்க்கையில் 11 என்ற எண், எண்ணங்கள், வேலை, விளையாட்டு, உணர்ச்சிகள் ஆகியவற்றை சமன்படுத்துகிறது.
* 11ஐ கூட்டினால் 2 வருகிறது. 2 என்ற எண்ணும் சமநிலை எண்ணாகும். இதுவும், சமத்துவம், நீதி, அமைதி, பரிவு ஆகியவற்றை உணர்த்துகிறது.
* பெங்க் சூ மாஸ்டர்களின் கணிப்புபடி இந்த நூற்றாண்டில் மிக புனிதமான நாள் 11&11&11. சொர்க்கமும் பூமியும் ஒரு கணம் சமநிலை அடையும் நாள் என்று கூறியுள்ளனர்.