இந்தோனேசியாவில் 3 தலைகளுடன் பிறந்த ஆண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வடக்கு சுமத்ராவின் பின்ஜாய் நகரில் வசிக்கும் கூலி தொழிலாளியின் மனைவிக்கு கடந்த சனியன்று ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த மகிழ்ச்சியை அந்த தம்பதியால் கொண்டாட முடியவில்லை. காரணம், குழந்தை வழக்கத்துக்கு மாறாக 3 தலைகளுடன் பிறந்தது.
4 கிலோ எடையில் பிறந்த அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் குழந்தை நீண்ட காலத்துக்கு உயிருடன் இருக்கும் என்று கூறமுடியாது என டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர் டிம்யானா கூறுகையில், நரம்பு குழாய் பாதிப்பு காரணமாக வழக்கத்துக்கு மாறாக இக்குழந்தை 3 தலைகளுடன் பிறந்துள்ளது. அதற்கு தீவிர சிகிச்சை அளிப்பதுடன் திரவ உணவு கொடுக்க முயற்சித்து வருகிறோம்.
உடல் நிலை மோசமாக இருப்பதால் நீண்ட காலம் உயிருடன் இருக்கும் என கூறமுடியாது என்றார். மேலும் சிறந்த மற்றும் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மேடன் ஹஜ் ஆதம் மாலிக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment