Tuesday, November 8, 2011

ஏர்போர்ட்

 இந்தியாவில் உள்ள முக்கியமான விமானநிலையங்களில்வாகனங்களை நிறுத்த  வசூலிக்கும் வாடகையை பற்றி ஒரு தொகுப்பு
    மொத்தம்ஆறு விமான நிலையங்களை பற்றி இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

 1.மும்பை சத்ரபதி சிவாஜி விமானநிலையம்:

    மொத்தமாக 880 கார் நிறுத்தலாம், 500 இருசக்கர வாகனங்கள் வரை நிறுத்தலாம். 
   அரைமணிக்கு கார் ஒன்றிற்க்கு 60 ரூபாய் வசூலிக்கபடுகிறது.
இரண்டுமணி நேரம் வரை 130 ரூபாயும் நாள் முழுவதும் என்றால் 750 ரூபாயும் வசூலிக்கபடுகிறது.மாதம் முளுவதுக்கும் பாஸ் வசதி கூட உள்ளது 10 ஆயிரம் ரூபாய் மட்டும்.
   இருசக்கர வாகனங்களுக்கு நான்கு மணிநேரத்திற்க்கு 15 ரூபாயும் வசூலிக்கபடுகிறது.

2.டெல்லி இந்திரா காந்தி விமானநிலயம்:

    மொத்தமாக 1500 கார் நிறுத்தலாம் பொது மற்றும் ஸ்பெஷல் என இருவகை உள்ளது, பொது பிரிவில் அரை மணிக்கு 50 ரூபாயும்,ஸ்பெஷலில் 70 ரூபாயும் வசூலிக்கபடுகிறது. நாள் ஒன்றுக்கு 600 மற்றும் 900 என கட்டணமும் ,மாத பாஸ் 16 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம் (பொது மற்றும் ஸ்பெஷல்) என்றளவிலும் உள்ளது.

3.பெங்களூரு சர்வதேச விமானநிலயம்:

  மொத்தமாக 2000 கார் நிறுத்தலாம் . இரண்டு மணிநேரம் வரை 60 ரூபாய் நாளொன்றுக்கு 720 ரூபாய் , மாத பாஸ் 5 ஆயிரம் ரூபாய்.
  இருசக்கர வாகனங்களுக்கு  ஒவ்வொரு இரண்டுமணி நேரத்திற்கும் 20 ரூபாய்.

4.சென்னை சர்வதேச விமானநிலயம் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் விமானநிலையம், கொல்கத்தா:

  சென்னையில் 600 கார் நிறுத்தும் அளவுக்கு வசதியும்,கொல்கத்தாவில் 400 கார் நிறுத்தும் அளவுக்கும் வசதி உள்ளது.
  கொல்கத்தாவை பொறுத்தவரையில் 4 மணி நேரத்திற்கு 60 ரூபாயும், நாள் ஒன்றுக்கு 360 ரூபாயும் வசூலிக்கபடுகிறது. சென்னையிலும் கிட்டதட்ட இதே தான். பிரிமியம் நிறுத்ததில் மட்டும் 4 மணி நேரத்திற்க்கு 100 ரூபாய். 
  இரண்டு விமானநிலையங்களிலுமே மாத பாஸ் நோ(கிடையாது).
  இரு சக்கர வாகனங்களுக்கு 4 மணி நேரத்திற்கு 15 ரூபாய்.

5.ராஜிவ் காந்தி சர்வதேச விமானநிலயம், ஹைத்ரபாத்:

  3 ஆயிரத்திற்க்கும் அதிகமான கார் நிறுத்தும் வசதி. அரை மணிக்கு 50 ரூபாய், 1 மணி நேரத்திற்க்கு 80 ரூபாய் நாள் ஒன்றுக்கு 300 ரூபாய். மாத பாஸ் இல்லை.
  இரு சக்கர வாகனங்களுக்கு 2 மணி நேரத்திற்க்கு 20 ரூபாய் நாள் ஒன்றிற்கு 100 ரூபாய்.

(குறிப்பு : ஏறக்குறைய அனைத்து விமானநிலையங்களிலுமே விரிவாக்க பணிகள் நடை பெறுவதால் கட்டண விகிதங்கள் ஏறலாம்! இறங்கலாம்!)

                      “புவர் இந்தியா”..........                          
       

No comments:

Post a Comment