இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். கேரள ரஞ்சி அணியில் இடம்பிடித்துள்ள அவர் 3-ம் தேதி தொடங்கவிருக்கும் போட்டியில் விளையாட தயாராகி வருகிறார்.
இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டது குறித்து அவர் கூறியதாவது: எனது எண்ணமெல்லாம் ரஞ்சி போட்டியில் திறமையை காட்ட வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. எனது திறமையை இதன்மூலம் நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் கிடையாது. மீண்டும் மீண்டும் எனது திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஒவ்வொரு பயிற்சிலும் என்னை மேம்படுத்தி கொண்டுதான் வருகிறேன். பயிற்சிக்காக அல்லது ஆட்டத்திற்காக களமிறங்கும்போது ஒழுக்கத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் களமிறங்குகிறேன். எனவே எந்தவித பிரச்னையும் இல்லை. தற்போது நான் கட்டுப்பாடோடுதான் நடக்கிறேன். ரஞ்சியில் சாதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டும்தான் எனக்கு உள்ளது. இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அணியில் நல்ல போட்டியை உருவாக்கும். இதன்மூலம் நானும் நன்றாக பந்து வீச முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment