Saturday, November 5, 2011

ஆப்பிள் vs ஆண்ட்ராய்டு !

உலகில் போருக்கா பஞ்சம்? ஈரான் & ஈராக் போர் இருபதாண்டுக்கு முன்பே முடிந்து விட்டது. அமெரிக்கா & ஈராக் போரும் , அதிபர் சதாம் தூக்கிலிடப்பட்ட கதையோடு முடிந்து விட்டது. சமீபத்தில் கடாபி கொல்லப்பட்டதுடன் லிபியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்து விட்டது அமெரிக்கா. ஆனால், இப்போது நடக்கும் போர் ஆயுதங்களுடன், குண்டுகளுடன் நடக்கும் போர் அல்ல. தகவல் தொடர்பு துறையில் நடக்கும் போர். ஆம், ஆப்பிள் & ஆண்ட்ராய்டு இடையே நடக்கும் போர் இது. முப்பதாண்டுக்கு முன் சாதா கருப்பு வெள்ளை டிவி வந்தபோது நாம் ஆர்ப்பரித்ததை மறக்க மாட்டோம். அடுத்து, கலர் டிவி வந்தபோது ஏற்பட்ட குஷிக்கு அளவே இல்லை. அதன் பின்னர் கம்ப்யூட்டர், லேப்டாப், இன்டர்நெட், மொபைல் போன் என்று ஆரம்பித்து இப்போது ஐபாட், ஐபேட், ஐபோன் என்று ஸ்மார்ட் போன்கள் வந்தபின் தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கம் நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்று விட்டன. டிவியானாலும், கம்ப்யூட்டரானாலும் சரி, மொபைல் போனாக இருந்தாலும் சரி, அதில் உள்ள ‘ப்ரோம்கிராம்களுக்கு’ என்று தனி ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவை. நாம் போனில் பேசுவது, கேமரா இயக்குவது, கேம்கள் விளையாடுவது, இன்டர்நெட் பார்ப்பது, இமெயில் அடிப்பது, ஸ்கைப், ஜிடாக் மூலம் வீடியோ தொடர்பில் பேசுவது எல்லாவற்றுக்கும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ‘அப்ளிகேஷன்’கள் தான் கைகொடுக்கின்றன. 10 லட்சம் ‘ஆப்ப்’ சாதா போன்களில் அடிப்படை வசதிகள் மட்டும் இருக்கும். ஸ்மார்ட் போன்கள் என்று சொல்லப்படும் உயர்ரக மொபைல் போன்களில் தான் மிக அதிகமான வசதிகள் இருக்கும். ஸ்மார்ட் போன் தயாரிப்பது ஒரு நிறுவனம். அதில் உள்ள வசதிகளை ஏற்படுத்துவது இன்னொரு நிறுவனம். அந்த நிறுவனம் தான் ‘ஆப்பரேட்டிங் சிஸ்டம்’ (ஓஎஸ்) களை அளிக்கும் நிறுவனம். இந்த நிறுவனம், லட்சக்கணக்கில் ‘அப்ளிக்கேஷன்’களை பதிவு செய்து விடும். இதற்கு தான் ‘ஆப்ப்’ சாப்ட்வேர் என்று பெயர். ஸ்மார்ட் போன்களில் நீங்கள் பேசுவது, இன்டர்நெட் பார்ப்பது மட்டுமல்ல, இ பேங்கிங், இ ஷாப்பிங் என்று மட்டுமல்ல; எதை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். = உடலில் எத்தனை பாகங்கள் இருக்கின்றன; எப்படி இந்த உடல் இயங்குகிறது; உயிர் என்றால் என்ன என்பது பற்றிய அறிவியல் நுணுக்கங்களை தெரிந்து கொள்ளணுமா? = அந்த ஓட்டலில் சைனீஸ் புட் சூப்பராக இருந்தது, அந்த தாய்லாந்து மீன் உணவு கூட செம தான். அதுபற்றி ரெசிபி பார்க்கணுமே... = காலைல சுப்ரபாதம் வைக்கணும், கந்தசஷ்டி கவசம் வீடியோல கிடைக்குமா? அருணா சாய்ராம், சுதான்னா எனக்கு பிடிக்கும்; அவங்களோட லாஸ்ட் இயர் டிசம்பர் கச்சேரி ஆல்பம் பார்க்கணுமே. = யார் அந்த போதி தர்மா, சொல்றதெல்லாம் உண்மையா, அவர் பற்றி படிக்கணுமே. = எனக்கு பிடிச்சமாதிரி வீடு கட்டணும், அதில் இன்டீரியர் செய்யணும், அது பற்றி ஒரு டெமோ பார்க்கணும். = அந்த கலர் டிரஸ் சூப்பர். ஆனா லண்டனில் தான் இருக்கு; அதை வாங்கணும். = அந்த ஆபீஸ்ல தான் என் கசின் இருக்கார்; அவரை தொடர்பு கொள்ளணும். இப்படி அம்மா, அப்பாவை தவிர, எல்லாவற்றையும் யார் உதவி இன்றி, அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள, என்ஜாய் பண்ண முடியுமா? ஆம், அதை தரும் ஒரு உற்ற நண்பர் தான் இந்த ‘ஆப்ப்’ என்று அழைக்கப்படும் அப்ளிக்கேஷன் சாப்ட்வேர். உலகில் நெம்பர் 1 ஓஎஸ் இதுவரை ஆப்பிள் நிறுவனம் தான் தந்தது. போட்டியாக இப்போது ஆண்டாராய்டு என்ற பெயரில் கூகுள் இந்த வர்த்தகத்தில் குதித்துள்ளது. நீயா நானா போட்டி ஆரம்பித்து விட்டது. ஆப்பிள் ஐபோன் வாவ்... ஆப்பிள் நிறுவனம் 2007 ம் ஆண்டு ஐபோன் அறிமுகம் செய்தபோது, அதை அடித்துக்கொள்ள இனி யாரும் இல்லை என்று தான் பேசப்பட்டது. இதோ, சமீபத்தில் ஐந்தாம் தலைமுறை ஐபோன் ஆப்பிள் ஐபோன் 4எஸ் வெளிவந்து விட்டது. வீடியோ கேமரா, 3ஜி வசதிகள், மீடியா ப்ளேயர், இன்டர்நெட், வைபீ, மல்டி டச் ஸ்கிரீன் என்று ஏகப்பட்ட வசதிகள் இதில் உள்ளன. ஆப்பிள் நிறுவனம் 5 லட்சம் ‘அப்ளிக்கேஷன்’களை உருவாக்கியுள்ளது. இதன் எண்ணிக்கை தொடர்ந்து பல மடங்காக பெருகிக்கொண்டிருக்கிறது. சமையல், மருத்துவம், இசை, சினிமா, நாடகம், நாவல், காமிக்ஸ், கேம்கள், விளையாட்டு, கேளிக்கை என்று என்னென்ன பிரிவுகள் உள்ளனவோ எல்லாவற்றையும் வீடியோ, ஆடியோ என்று அள்ளித்தந்தபடி உள்ளது இந்த நிறுவனம். ஸ்மார்ட் போன் வாங்கி விட்டால், அதில் அடிப்படையாக சில அப்ளிக்கேஷன்கள் இருக்கும். மேலும், சில அப்ளிக்கேஷன் வேண்டுமானால், அதில் பெற வசதி உள்ளது. சில இலவசமாக உள்ளன. சிலவற்றுக்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும். போனில் ‘சர்ச்சிங்’ செய்யும் போது, உதாரணமாக கோல்ப் மேட்ச் பார்க்க வேண்டும்; ஆனால், அது அமெரிக்காவில் நடந்துள்ளது, ஏன், ஒரு ஹாலிவுட் படம் பார்க்கணும், உடனே தேடலாம். அதற்கு சில டாலர் கட்டணம் இருக்கும். கட்டினால், தானாகவே டவுன்லோடு ஆகி விடும். 100 கோடி டவுன்லோடு சில அப்ளிக்கேஷன்களை ஆப்பிள் நிறுவனமே தயார் செய்யும். ஆயிரக்கணக்கான அப்ளிக்கேஷன்களை வெளியாரும் தயார் செய்து ஆப்பிள் மூலம் வெளியிடுவர். உதாரணமாக, புத்தகத்தை அதன் ஆசிரியர் ஒரு அப்ளிக்கேஷன் சாப்ட்வேராக மாற்றி, ஆப்பிள் மூலம் வெளியிடலாம். வாடிக்கையாளர் டவுன்லோடு செய்யும் போது, கட்டணத்தில் ஆப்பிளுக்கு 30 சதவீதம், ஆசிரியருக்கு 70 சதவீதம் போகும். ஆப்பிள் ஐபோன் அப்ளிக்கேஷன்கள் வேண்டுமானால் இன்டர்நெட்டில் அதன் ஆப்ப் ஸ்டோர் மற்றும் ஐட்யூன் ஸ்டோர்களில் இருந்து பெறலாம். கடந்த 2007 ல் ஆப்பிள் ஐபோன் வந்தபோது ஐந்து லட்சம் டவுன்லோடு தான் செய்யப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் நூறு கோடி அப்ளிக்கேஷன்களை டவுன்லோடு செய்யும் அளவுக்கு வாடிக்கையாளர்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றது ஆப்பிள். ஆண்ட்ராய்டு அட்டகாசம் கூகுள் நிறுவனத்தின் புதிய அவதாரம் தான் ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன் சிஸ்டம். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வெளியிட்டு புரட்சியை ஏற்படுத்திய 2007 ல் தான் இந்த அவதாரம் ஓசைப்படாமல் உலகில் அவதரித்தது. டேப்லட் கம்ப்யூட்டர் முதல் ஸ்மார்ட் போன் வரை எல்லாவற்றிலும் இதன் அப்ளிக்கேஷன்களை பயன்படுத்தலாம். அதுவும் ஆப்பிள் போல இல்லாமல், கூகுள் அங்கீகரித்த மற்ற சில நிறுவனங்களின் போன்களிலும் இந்த வசதி உள்ளது. அப்படியி ல்லாவிட்டாலும், நாமே எங்கிருந்தும் எளிதில் டவுன்லோடு செய்யலாம். கூகுள் மூலம் தான் டவுன்லோடு செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. மேலும் ஜாவா தொழில்நுட்பத்துக்கு கைகொடுக்கும் வகையில் உள்ளதால், இதில் வெளியார் அப்ளிக்கேஷன்களை பதிவு செய்யவும், அதை மற்றவர் பயன்படுத்த விற்பனை செய்வதும் எளிது. ஆப்பிள் ஸ்டோரில் போய் பதிவு செய்து அவர்கள் ஒப்புக்கொண்டால் தான் ஒரு ஆசிரியர் தன் புத்தகத்தை அதன் மூலம் விற்பனை செய்ய முடியும். ஒரு தயாரிப்பாளர் தன் சினிமா சிடியை விற்பனை செய்ய முடியும். ஆனால், கூகுள் விஷயத்தில் அப்படியில்லை. அதன் ஒருவர் தன் திறமையை வெளிப்படுத்த எந்த ஒரு விஷயத்தையும் பதிவு செய்யலாம். அதை மற்றவர் வாங்கலாம். இதற்கு தடை இல்லை. கட்டணம் முறைப்படி பிரித்துக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக, குறிப்பிட்ட புத்தகத்தை தேடி கண்டுபிடித்து டவுன்லோடு செய்தால், கட்டணத்தில் அதன் ஆசிரியருக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் போய் விடும். கூகுளுக்கு அதன் பங்கு போய் விடும். இதனால், கூகுளுக்கு திடீர் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. ஆண்ட்ராய்டு மார்க்கெட் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்ப் ஸ்டோர் என்றால், ஆண்ட்ராய்டுக்கு ஆண்ட்ராய்டு மார்க்கெட். முதலில் கூகுள் அப்ளிக்கேஷன்கள், அதன் கூகுள் டிவி, நோட்புக், டேப்லட் கம்ப்யூட்டர்களில் தான் கிடைத்தது. அதன் பின், எச்டிசி நிறுவனத்தின் ட்ரீம் என்ற ஸ்மார்ட் போன்களில் கிடைத்தது. அதன் பின் ஆப்பிள் ஐபாட்டுக்கு பதிலடியாக ஐட்ராய் என்று விற்பனை செய்தது. கடந்தாண்டு தான் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது கூகுள் ஆண்ட்ராய்டு. சாம்சங் நிறுவன போன்களில் ஆண்ட்ராய்டு புகுத்தப்பட்டது. சாம்சங்கின் நெக்சஸ் எஸ் மறறும் சமீபத்தில் வெளியான நெக்சஸ் கேளாக்சி போன்கள் , இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் மூலம் தான் விற்பனையில் சாதனை படைத்தன. 2 லட்சம் கேம்கள் உட்பட 600 கோடி அப்ளிக்கேஷன்கள் ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளன. யாரும் அப்ளிக்கேஷன் சாப்ட்வேர்களை பதிவு செய்து விற்பனை செய்யலாம். யாரும் வாங்கலாம் என்று தலையீடு இல்லா வர்த்தகத்தை அறிமுகம் செய்து ஆண்ட்ராய்டு புது திருப்பத்தை ஏற்படுத்தியது இந்த பிசினசில். ஆப்பிளுக்கு இது சவாலாக உள்ளது என்பது உண்மையே. ஆப்பிளில் உள்ளதை விட பல மடங்கு வசதிகள் கூகுள் தருகிறது. கூகுள் மேப், ஸ்கை மேப், உள்ளூர் சர்ச்சிங், பிங்கர் ரிட்டன் லெட்டர், கூகுள் ஷாப்பர், மை ட்ராக் என்று கையடக்க போனை வைத்துக்கொண்டே, உலகை சுற்றி வரக்கூடிய வசதிகளை கூகுள் தருகிறது. இது வெறும் ஆரம்பமே ஆப்பிள் & ஆண்ட்ராய்டு போர் உண்மை தானா என்று கேட்டால், மார்க்கெட் ஆய்வு நிறுவனம் நீல்சன் என்ன சொல்கிறது தெரியுமா? ‘இது வெறும் ஆரம்பம் தான். ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் ஓஎஸ் தான் இன்னும் முதன்மை பெறுகிறது. இதில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது உண்மை தான். சந்தை இப்போது இறுக்கமாக உள்ளது. இந்த போர் இன்னும் சில ஆண்டுகள் போகலாம். அதன் பின் தான் யார் முதல் என்பது தெரியும். இப்போது தான் ஸ்மார்ட் போனுக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 45 சதவீதத்தை தாண்டும் போது தான் ஒரு கணிப்பு கிடைக்கும். அதுவரை ஆப்பிள் & ஆண்ட்ராய்டு இடையே அடுத்தடுத்த கணைகளை புதுப்புது அவதாரங்கள் மூலம் பார்க்கலாம். அத்தோடு, இப்போது முப்பதாயிரத்தை தாண்டி கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போன்கள் விலை, ஐந்தாயிரத்துக்கு கீழ் வந்தாலும் வியப்பதற்கில்லை. அப்போது தான் உண்மையான லீடர் யார் என்பது தெரியும். ஆப்பிள் கசக்குமா... < அமெரிக்க நிறுவனம் ஆப்பிள். கம்ப்யூட்டர் தயாரித்த இதன் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் சாதுர்யத்தால் ஸ்மார்ட் போன் ஆதிக்கத்தை கையிலெடுத்தது 2007 ல். < ஆப்பிள் கம்ப்யூட்டர், ஆப்பிள் ஐபாட், ஐபேட் என்று பைத்தியமாக இருந்த பணக்கார நாட்டு மக்கள், அதன் ஐபோன் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று ஆராதித்தனர். < சமீபத்தில் கேன்சருக்கு பலியாகி விட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். ‘ஆப்பிள் ஓஎஸ் தொழில்நுட்பத்தை திருடி விட்டது ஆண்ட்ராய்டு. இதற்காக ‘தெர்மோநியூக்ளியர்’போருக்கு நான் தயார்’ என்று மறைவதற்கு சில மாதம் முன் கர்ஜித்தார். < ஆண்ட்ராய்டு விஷயத்தில் கோர்ட் வரை போயிருக்கிறது ஆப்பிள். சண்டை அங்கேயும் நடக்கிறது. சில நாடுகளில் இரு நிறுவனங்களும் , ஓஎஸ் விஷயத்தில் தடை கோரி மோதி வருகின்றன. < ஆப்பிள் என்றால் அதற்கு இணையே இல்லை என்று நினைத்த மக்கள், இப்போது அதற்கு போட்டியாக ஆண்ட்ராய்டு போன்களை கருத ஆரம்பித்து விட்டனர். < விளைவு, விலை உயர்ந்த போன் என்று கருதப்பட்ட ஆப்பிள் போன், இனி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆம், குறைந்த விலை போன்களை அறிமுகம் செய்ய உள்ளது ஆப்பிள். நோக்கியா பகீரதப் பிரயத்னம் < நோக்கியா, முதன் முதலில் சிம்பியன் என்ற ஓஎஸ் சாப்ட்வேரை அறிமுகம் செய்தது. இது தான் சில ஆண்டுகள் முன் வரை கொடிகட்டிப்பறந்தது. அதனால் நோக்கியா நெம்பர் 1 ஆக இருந்தது. < ஆப்பிள், ஆண்ட்ராய்டு போட்டி வந்தபின், நோக்கியா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. < இதனால், மைக்ரோசாப்ட் விண்டோஸ் மூலம், நோக்கியா புது அப்ளிக்கேஷன்களை தந்து, விட்ட இடத்தை பிடிக்க பகீரதப்பிரயத்னம் செய்கிறது. < நோக்கியா விற்பனை 30.7 சதவீதம் என்ற நிலை மாறி, உலக அளவில் 24.5 சதவீதத்துக்கு குறைந்து விட்டது. < சமீபத்தில் சி2 &03, சி2 & 06 ரக போன்கள் மூலம் ஓரளவு விற்பனை உயர்ந்துள்ளது. ஆண்ட்ராய்டு பிறந்த கதை < அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தின் பாலோ ஆல்டோ என்பவருக்கு சொந்தமான நிறுவனம் ஆண்ட்ராய்டு இன்கார்ப்பரேஷன். < ஆண்ட்ராய்டு என்ற நிறுவனத்தின் சாப்ட்வேர் குழந்தை தான் ஆண்ட்ராய்டு. < நிறுவனத்தை ஆரம்பிக்க உதவிய ஆண்டி ரூபின் திவாலானார். நிறுவனம் திண்டாடியது. அப்போது தான் கூகுள் கவனத்துக்கு இது வந்தது. < ஆரம்பத்தில் கூட்டு வைத்த கூகுள், 2005ல் ஆண்ட்ராய்டை வாங்கி விட்டது. < ஓபன் ஹேண்ட்செட் அலையன்ஸ் என்ற பெயரில் தனி துணை நிறுவனம் ஆரம்பித்து, 2007 முதல் அப்ளிகேஷன்களை கூகுள் வெளியிட ஆரம்பித்தது. < ஆரம்பத்தில் கூகுள் டிவியில் ஓஎஸ் பொருத்தப்பட்டது. அதன் பின் ஆண்ட்ராய்டு போன்களில்; மேலும் எச்டிசி போன்களில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொடிகட்டிப்பறந்தது. இப்போது சாம்சங்கில் சக்கை போடு போடுகிறது. பிளாக்பெர்ரியும் தயார் < கனடா நாட்டு ‘ரிசர்ச் இன் மோஷன்’ என்ற நிறுவனம் ஆரம்பித்தது பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன். பர்சனல் டிஜிட்டல் வசதி, மீடியா பிளேயர், இன்டர்நெட் பிரவுசர், கேம்கள் என்று பல வசதிகளை தந்தது. < ஆப்பிள், கூகுள், நோக்கியாவுக்கு அடுத்த இடம் இதற்கு. < இதன் இன்டர்நெட் சேவை மகத்தானது. 91 நாடுகளில் 500 மொபைல் ஆப்பரேட்டர் கம்பெனிகள், இதை பயன்படுத்துகின்றன. < முதன் முதலில் பிளாக்பெர்ரி 850 ரக போன்கள் 1999 ல் வெளியானது. < மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஓஎஸ்கள் இதில் பொருத்தலாம். < கடந்தாண்டு மட்டும் 5 கோடி போன் விற்பனையானது. ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானது. < 2008 மும்பை தாக்குதலின் போது, தீவிராவதிகளுக்கு மெசேஜ் அனுப்ப, வீடியோ வேவு பார்க்க உதவியது பிளாக்பெர்ரி சாட்டிலைட் போன் என்பதால் சர்ச்சைக்கு உள்ளானது. < இதன் லேட்டஸ் மாடல்கள், பிளாக்பெர்ரி டார்ச் 9850, 9860, போல்டு 9900, 9930 ரக போன்கள்.

No comments:

Post a Comment