Tuesday, November 8, 2011

சச்சின் 15,000 ரன்கள் கடந்து சூப்பர் சாதனை



இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் இன்னொரு சாதனை படைத்தார். டெஸ்ட் வரலாற்றில் 15 ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டில்லி டெஸ்டில், இன்று 33 ரன்கள் எடுத்த சச்சின், 28வது ரன்னை கடந்த போது இச்சாதனை படைத்தார்.

இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் முடிசூடா மன்னனாக நீடிக்கிறார்.

இதுவரை இவர், 182 டெஸ்டில் பங்கேற்று 51 சதம், 61 அரைசதம் உட்பட 15,005 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் மற்றொரு இந்திய வீரர் டிராவிட் (12, 859 ரன்கள்) உள்ளார். 
டெஸ்ட் அரங்கில் பத்தாயிரம் ரன்களை கடந்த வீரர்கள்: 
வீரர் போட்டி ரன்கள் சதம்/அரைசதம் சச்சின் (இந்தியா) 182 15,005 51/61 டிராவிட் (இந்தியா) 158 12,859 35/61 பாண்டிங் (ஆஸி.,) 154 12,487 39/56 லாரா (வெ.இ.,) 131 11,953 34/48 காலிஸ் (தெ.ஆ.,) 145 11,947 40/54 ஆலன் பார்டர் (ஆஸி.,) 156 11,174 27/63 ஸ்டீவ் வாக் (ஆஸி.,) 168 10,927 32/50 கவாஸ்கர் (இந்தியா) 125 10,122 34/45 
* டெஸ்ட் அரங்கில் 15 ஆயிரம் ரன்களை கடந்த சச்சின், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 31 டெஸ்டில் விளையாடியுள்ள இவர், 11 சதம், 13 அரைசதம் உட்பட 3,151 ரன்கள் எடுத்துள்ளார். 

ஒவ்வொரு அணிக்கு எதிராக சச்சின் எடுத்த ரன்கள்: 
அணி போட்டி ரன்கள் சதம்/அரைசதம் ஆஸ்திரேலியா 31 3,151 11/13 இங்கிலாந்து 28 2,423 7/12 இலங்கை 25 1,995 9/6 தென் ஆப்ரிக்கா 25 1,741 7/5 நியூசிலாந்து 22 1,532 4/8 வெஸ்ட் இண்டீஸ் 17 1,368 3/7 பாகிஸ்தான் 18 1,057 2/7 ஜிம்பாப்வே 9 918 3/3 வங்கதேசம் 7 820 5/0 
அசத்தல் அறிமுகம் 
சுழலில் அசத்திய தமிழக வீரர் அஷ்வின், 47 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அறிமுகமான முதல் போட்டியில், ஐந்து அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய ஏழாவது இந்திய பவுலர் என்ற சாதனை படைத்தார்.

No comments:

Post a Comment