Tuesday, November 8, 2011

வேலாயுதம் -ஏழாம் அறிவு -மங்காத்தா எது டாப் -ஒரு அலசல்


இந்த வருடத்தில் விஜய் ,அஜித்,சூர்யா,விக்ரம் படங்கள் வெளியாகி விட்டன .இவற்றில் எது அதிக வசூல் பெரும் என்பது சினி உலகம் சார்ந்த அனைவரினதும் எதிர் பார்ப்பு ஆகும் .அந்த வகையில் சினி உலகின் மையம் ஆக விளங்குகின்ற சென்னையில் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்கள் பெற்ற வசூலை அலசி ஆராய்வதே இந்த பதிவு .

வேலாயுதம்-ஏழாம் அறிவு 
இந்த தீபாவளிக்கு வேலாயுதம்,ஏழாம் அறிவு ஆகியன மோதின .சென்னை யில்  ஏழாம் அறிவு 5 நாள் முடிவில் இருந்த நிலை இது .
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend594
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 13,217,553

Total collections in Chennai: Rs. 2.20 Crore

வேலாயுதம் இருந்த நிலை இது .
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend492
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,701,270
Total collections in Chennai: Rs. 1.95 Crore


ஏழாம் அறிவுக்கு ஏற்கனவே இருந்த உச்ச  எதிர்பார்ப்பு (வேலாயுதத்தை விட ) காரணமாகவும் தயாரிப்பாளர் உதயநிதி அதிக திரையரங்குகளை பெற்ற காரணத்தாலும் முதல் வார இறுதி நாட்களில் ஏழாம் அறிவு 594 காட்சிகளும்  வேலாயுதம் 492 காட்சிகளும் காண்பிக்கப் பட்டன .5 நாள் முடிவில் ஏழாம் அறிவு 2 .20 கோடியும் வேலாயுதம் 1 .95 கோடியும் வசூலித்தன.(விசேட காட்சிகள் சேர்க்கப் படவில்லை ).ஏழாம் அறிவு முதல் இடத்தில் இருந்தது .எனினும்   சராசரி திரையரங்குகளின் occupancy  விகிதம் இரண்டு படங்களுக்கும் சமமாக இருந்தது (90 %).


சரி ஒரு வார நிறைவில் 
ஏழாம் அறிவு 
No. Weeks Completed1
No. Shows in Chennai over this weekend495
Average Theatre Occupancy over this weekend: 85%
Collection over this weekend in Chennai: Rs. 10,386,048

Total collections in Chennai: Rs. 4.56 Crore 

வேலாயுதம்

No. Weeks Completed1
No. Shows in Chennai over this weekend498
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,068,930

Total collections in Chennai: Rs. 4.36 Crore 

ஏழாம் அறிவு முதல் வார இறுதியில்   594 ஆக இருந்த காட்சிகளின் எண்ணிக்கை அடுத்த வார இறுதியில் 495 ஆக குறைவடைந்தது (99 குறைவு  ) வேலாயுதம் 492 இலிருந்து 498  ஆக அதிகரித்தது .(6  கூட).ஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் வேலாயுதத்தை விட 104    காட்சிகள் அதிகமாக காண்பிக்கப் பட்ட ஏழாம் அறிவு அடுத்த வார இறுதியில் சடுதியாக குறைவடைந்து வேலாயுதத்தை   விட 3 காட்சிகள் குறைவாக வீழ்ச்சி அடைந்தது .ஏழாம் அறிவு திரையரங்கு கிடைப்பனவு விகிதம 90   இலிருந்து 85  ஆக குறைவடைந்தது .ஆனால் வேலாயுதம் தொடர்ந்து 90  ஆகவே   இருந்தது .வழமையாக நாட்கள் செல்ல செல்ல வார இறுதி காட்சிகளும் ,திரையரங்கு occupancy வீதங்களும் குறைவடைவதே வழமை .ஆனால் வேலாயுதத்துக்கு காட்சிகள் அதிகரித்தும் occupancy  மாறாமலும் இருப்பது அது திடமான   நிலையில் உள்ளதை காட்டுகிறது .

.
ஆக ஏழாம் அறிவு 4 .56 கோடியும் வேலாயுதம் 4 .36 கோடியும் பெற்றுள்ள போதும் ஏழாம் அறிவு வீழ்ச்சி பாதையில் செல்ல வேலாயுதம் முதல் இடத்தை பிடித்துள்ளது .

வேலாயுதம்-மங்காத்தா 



மங்காத்தா எவ்வித போட்டியும் இல்லாமல் தனித்து   வெளி வந்தது .   வார இறுதியில் 615  காட்சிகள் காண்பிக்கப் பட்டன .வேலாயுதம் 498 .திரையரங்கு occupancy 80 % ஆக இருந்தது .ஒரு வாரத்தின் பின்னர் 4 .24  கோடி வசூல் செய்துள்ளது .அதிக காட்சிகள் (117  ).திரையிட்ட போதும் வேலாயுதம் பெற்ற வசூலை விட குறைவாகவே பெற்றுள்ளது .


சகல விபரங்களும் உண்மையான தகவல்கள் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் படுகின்ற http://www.behindwoods.com. இனால் வெளியிடப் பட்டவை .

No comments:

Post a Comment